பசிக்கு தினமும் உண்ண - அவள் ஈன்றாள் செழித்தப் பயிரை உன்தாகம் தீர்க்க நீராய் - அவள் கண்ணீர் மழைப் பொழிதாள் ஆதி காலம் தொட்டே - அவள் உன் மானம் காக்கவென்றே மரப்பட்டை இலை தந்தாள் - தன் மானம் இழந்து நின்றாள்

வாழு ...வாழவிடு (கவிதை)

நான் இயற்றிய கவிதை . வாசித்துவிட்டு கருத்து அல்லது கவிதை எழுதும் முறை பற்றி கூறவும். மென்மை யான பெண்மை-அவள் இயற்கை வடித்த தாய்மை கருணைக் கொண்ட உள்ளம்-அவள் உன்னைச் சுமந்த தெய்வம் உயிராய் நீயும் வாழ -அவள் தூய்மை காற்றைத் தந்தாள் நீ பாதம் தாங்கி நடக்க-தன் உடலைத் தரையாய் விரித்தாள் ( இன்று 2 கன்னி )தன் மீதியை
தன் அம்மாவைப் பற்றி பிறர் நல்லதை கூறும் போது அஞ்சலைக்குப் பெருமையாக இருக்கும். செல்டிங் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவள் இராஜம் அவளுடைய அப்பா அந்தத்தோட்டத்தின் மேனேஜர். தன் ஒரே பிள்ளையான இராஜத்தைச் செல்லமாகவும் , கண்டிப்பாகவும் வளர்த்தார் மேனேஜர் மோகன். அன்பும் கண்டிப்பும் தன் மகள் மீது மட்டும் காட்டுபவரல்ல மேனேஜர் மோகன் தன் தோட்டப் பாட்டாளிகளிடமும் அன்பு கண்டிப்பும் அக்கறையும் கொண்டவர். “ என்ன பெருமாள் , இன்னும் உன் பொண்டாட்டிய அடிக்கிறியா “? “ஹி ஹி… இல்லிங்க சார், நீங்க அறிவுரை சொன்னதலிருந்து நல்லாப் பாத்துக்கிறேன் சார்” தலையைச் சொரிந்து சற்று முதுகு குனிந்து கொண்டே மருதன் தன் மேனேஜர் மீது வைத்த மரியாதை வெளிபடுத்தினான். “ அதான பார்த்தேன் , பொண்டாட்டி என்பவ நம் அம்மாவுக்கு அப்புறம் நம்மள கவனிக்கிறவ ‘ அதனால அவங்களுக்கு நாம மரியாதையும் அன்பும் கொடுக்கனும் தெரியுதா “ ?
சரியா ? தவறா ( பகுதி 3 ) அஞ்சலை அக்காவைத் தன் உடன் பிறவா சகோதரியாய் மனதில் ஏற்று கொண்டாள் காவியா. அக்காவின் வீட்டிற்குச் செல்வதில் அவளுக்கு அலாதி விருப்பம். அஞ்சலை அக்காவிடம் தான் பல விஷயங்கள் பேசுவாள் காவியா. “இன்னிக்கி ஞாயித்து கிழம , அக்கா வீட்டில் தான் இருப்பாள்” என முனுமுனுத்தப்படியே .சீக்கிரமா குளிச்சிட்டு அக்கா வீட்டை நோக்கி விரைந்தாள். “அக்கா ! அக்கா ! “ வா காவியா வா “ ,நான் கிச்சன்ல இருக்கேன் “ அஞ்சலை அக்காவின் குரல் ஒலித்தது. கையில் கொண்டு வந்த தோசையையும் சட்டினியையும் அக்காவிடம் நீட்டி “ அக்கா அம்மா கொடுத்தாங்க, உங்களுக்கு தான் அம்மா தோசை செஞ்சா ரொம்ப பிடிக்கும்ல”. “ஆமா காவியா , அம்மா செய்ற தோசையும் சட்டினியும் எங்கம்மா செய்யிறது போல இருக்கும்” “மாவுல ஈஸ் கூட போட மாட்டாங்க , சும்மா அரைச்ச மாவ கைவிட்டு கிளறி ரெண்டு காஞ்ச மொளகா மட்டும் தான் போடுவாங்க. காலையில பார்த்த மாவு நல்லா பொங்கி புளிச்சிடும்” அவங்க கைபக்குவம் அப்படியே சரஸ்சம்மாவுக்கு இருக்கு” அதைச் சொல்லும் போதே அஞ்சலையின் கண் கலங்குவதைக் கண்டால் காவியா . அஞ்சலையின் அம்மா ராஜம் இறந்து 1 வருஷமாயிடுச்சி .அந்த மகராசி எல்லாரிடமும் அன்பா பழகுவாங்க. அந்த குடியிருப்புப் பகுதியில் இருக்கும் எல்லாருக்கும் அவங்கள பிடிக்கும். அவங்க வீட்டுத் தள்ளி கொஞ்சம் தூரத்தில இருக்கும் மலாய்கார மச்சி ரோசினா அவசரமா எங்காவது போனா அவங்க பிள்ளைகள ராஜம் வீட்டில தான் விட்டுப் போவாங்க. தம் பிள்ளையப் போலவே அந்த மாற்றான் இனப் பிள்ளையையும் பார்த்துக்கொள்ளுவார் ராஜம் அம்மா. “ ஹேய் ராஜம் அவாக் பாஞ்ஞாக் பகுஸ்லா , சுக்கா தோலோங் செமுவா ஓராங் ” என்று புகழ்ந்து சொல்லுவாங்க. அப்படிப்பட்ட நல்ல மனிஷியத்தான் அந்த கடவுள் கொண்டுட்டுப் போயிட்டான். என்று அடிக்கடி மச்சி ரோசினா அஞ்சலையைப் பார்த்தா சொல்லி வருத்தப் படுவாங்க.

சரியா? தவறா ? (2 )

சரியா ? தவறா ? ( 2 ) காவியா , பெயருக்கு ஏற்ற வாறு அழகும் திறமையும் உள்ளவள். பள்ளி பருவத்தில் எல்லாப் பெண்பிள்ளைகளும் உலகம் அறியாமல் , மகிழ்ச்சியே வாழ்க்கையாய் வாழ்ந்தவள். தன் அப்பாவிற்குச் செல்ல மகள். “ காவியா ! மணி எட்டு ஆச்சு இன்னுமென்ன பொம்பளப்பிள்ளைக்குத் தூக்கம்” பெண் பிள்ளைப் பெற்ற எல்லா அம்மாக்களும் காலையில் பாடும் சுப்ரபாதம் இதுவாதான் இருக்கும். காவியாவுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன. “ அட விடு மஞ்சுளா , அவ தூங்கட்டும் , பெத்தவங்க வீட்டுலதான் பொம்பளப் பிள்ளைங்க தூங்க முடியும் நல்லா தூங்கட்டும், சித்தி திரைப்படத்தில் வெளியான ‘காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே ! காலமதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே ! என்ற பாடலின் அர்த்தம் அறிந்தவர் செல்லப்பன். அதான் தன் மனைவியைத் தடுத்தார். “ நீங்க ரொம்பதான் அவளுக்குச் செல்லம் கொடுக்குறீங்க” காவியா படுக்கையில் படுத்துப் புரண்டுக் கொண்டே “ அப்பா பேருலே செல்லம்னு இருக்கும்மா, அதான் செல்லங் கொடுக்குறாரு” போதும் போதும் நீ உங்க அப்பாவுக்கு சப்போட் பன்றதும் . உங்க அப்பா உனக்கு சப்போட் பன்றதும் , எழுந்து சீக்கிரம் குளிச்சிட்டு , அஞ்சல அக்காவைப் போய் பார்த்துட்டு இந்த தோசையும் சட்னியும் கொண்டு போய் கொடு . அம்மாவின் கட்டளையை நிறைவேற்ற தயாரானாள்.
சரியா ? தவறா ? (பகுதி 1 ) மஞ்சள் நிற ஒளிக்கதிர்களைத் தெளித்துக் கொண்டிருந்தான் கதிரவன். நீல வண்ணச் சேலைக்காரி மஞ்சள் வண்ண சேலைக்கு மாறியிருந்தாள். “பொன் மாலைப் பொழுது இது ஒரு பொன் மாலைப் பொழுது” எனும் ராஜாவின் இசையில் உருவான பாடல் மிகப்பொருத்தமாக வேறு மின்னல் பன்பலையில் ஒலித்துக் கொண்டிருந்தது. வானமகள் மெல்லியத் துளிகளைச் சிந்திக்கொண்டிருக்க பால்கேனியில் அமர்ந்து இவற்றையெல்லாம் ரசித்தப்படியே தன் மெல்லிய உதட்டினை காப்பி நிறம்பிய கோப்பையில் பதித்து சுர்..ர்ர்….. என உறிஞ்சினாள் காவியா. ஆனால் மனதிற்கும் மூளைக்கும் ஒரு பெறும் போராட்டம் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. “நான் செஞ்சது சரியா தவறா இல்ல இப்பத்தான் ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கேனா’? “நான் செஞ்சது சரியா தவறா இல்ல இப்பத்தான் ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கேனா’? சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளைப் போல அதையே மனதில் அசைப்போட்டுச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
நாவல் எழுதுவது எப்படி எனும் பயிலரங்கில் 13.8.2022 தலைநகரில் இயல் மன்ற ஏற்பாட்டில் பொன் கோகிலம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. அதில் கலந்து கொண்ட பிறகே நாவல் எழுதுவதைப் பற்றி அறிந்து தெளிவுற்றேன். அச்சிற்றறிவைக் கொண்டு நாவல் எழுதலாம் என முடிவெடுத்துள்ளேன்.