சரியா ? தவறா ? (பகுதி 1 ) மஞ்சள் நிற ஒளிக்கதிர்களைத் தெளித்துக் கொண்டிருந்தான் கதிரவன். நீல வண்ணச் சேலைக்காரி மஞ்சள் வண்ண சேலைக்கு மாறியிருந்தாள். “பொன் மாலைப் பொழுது இது ஒரு பொன் மாலைப் பொழுது” எனும் ராஜாவின் இசையில் உருவான பாடல் மிகப்பொருத்தமாக வேறு மின்னல் பன்பலையில் ஒலித்துக் கொண்டிருந்தது. வானமகள் மெல்லியத் துளிகளைச் சிந்திக்கொண்டிருக்க பால்கேனியில் அமர்ந்து இவற்றையெல்லாம் ரசித்தப்படியே தன் மெல்லிய உதட்டினை காப்பி நிறம்பிய கோப்பையில் பதித்து சுர்..ர்ர்….. என உறிஞ்சினாள் காவியா. ஆனால் மனதிற்கும் மூளைக்கும் ஒரு பெறும் போராட்டம் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. “நான் செஞ்சது சரியா தவறா இல்ல இப்பத்தான் ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கேனா’? “நான் செஞ்சது சரியா தவறா இல்ல இப்பத்தான் ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கேனா’? சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளைப் போல அதையே மனதில் அசைப்போட்டுச் சொல்லிக்கொண்டிருந்தாள்.