சரியா? தவறா ? (2 )

சரியா ? தவறா ? ( 2 ) காவியா , பெயருக்கு ஏற்ற வாறு அழகும் திறமையும் உள்ளவள். பள்ளி பருவத்தில் எல்லாப் பெண்பிள்ளைகளும் உலகம் அறியாமல் , மகிழ்ச்சியே வாழ்க்கையாய் வாழ்ந்தவள். தன் அப்பாவிற்குச் செல்ல மகள். “ காவியா ! மணி எட்டு ஆச்சு இன்னுமென்ன பொம்பளப்பிள்ளைக்குத் தூக்கம்” பெண் பிள்ளைப் பெற்ற எல்லா அம்மாக்களும் காலையில் பாடும் சுப்ரபாதம் இதுவாதான் இருக்கும். காவியாவுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன. “ அட விடு மஞ்சுளா , அவ தூங்கட்டும் , பெத்தவங்க வீட்டுலதான் பொம்பளப் பிள்ளைங்க தூங்க முடியும் நல்லா தூங்கட்டும், சித்தி திரைப்படத்தில் வெளியான ‘காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே ! காலமதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே ! என்ற பாடலின் அர்த்தம் அறிந்தவர் செல்லப்பன். அதான் தன் மனைவியைத் தடுத்தார். “ நீங்க ரொம்பதான் அவளுக்குச் செல்லம் கொடுக்குறீங்க” காவியா படுக்கையில் படுத்துப் புரண்டுக் கொண்டே “ அப்பா பேருலே செல்லம்னு இருக்கும்மா, அதான் செல்லங் கொடுக்குறாரு” போதும் போதும் நீ உங்க அப்பாவுக்கு சப்போட் பன்றதும் . உங்க அப்பா உனக்கு சப்போட் பன்றதும் , எழுந்து சீக்கிரம் குளிச்சிட்டு , அஞ்சல அக்காவைப் போய் பார்த்துட்டு இந்த தோசையும் சட்னியும் கொண்டு போய் கொடு . அம்மாவின் கட்டளையை நிறைவேற்ற தயாரானாள்.