சரியா ? தவறா ( பகுதி 3 ) அஞ்சலை அக்காவைத் தன் உடன் பிறவா சகோதரியாய் மனதில் ஏற்று கொண்டாள் காவியா. அக்காவின் வீட்டிற்குச் செல்வதில் அவளுக்கு அலாதி விருப்பம். அஞ்சலை அக்காவிடம் தான் பல விஷயங்கள் பேசுவாள் காவியா. “இன்னிக்கி ஞாயித்து கிழம , அக்கா வீட்டில் தான் இருப்பாள்” என முனுமுனுத்தப்படியே .சீக்கிரமா குளிச்சிட்டு அக்கா வீட்டை நோக்கி விரைந்தாள். “அக்கா ! அக்கா ! “ வா காவியா வா “ ,நான் கிச்சன்ல இருக்கேன் “ அஞ்சலை அக்காவின் குரல் ஒலித்தது. கையில் கொண்டு வந்த தோசையையும் சட்டினியையும் அக்காவிடம் நீட்டி “ அக்கா அம்மா கொடுத்தாங்க, உங்களுக்கு தான் அம்மா தோசை செஞ்சா ரொம்ப பிடிக்கும்ல”. “ஆமா காவியா , அம்மா செய்ற தோசையும் சட்டினியும் எங்கம்மா செய்யிறது போல இருக்கும்” “மாவுல ஈஸ் கூட போட மாட்டாங்க , சும்மா அரைச்ச மாவ கைவிட்டு கிளறி ரெண்டு காஞ்ச மொளகா மட்டும் தான் போடுவாங்க. காலையில பார்த்த மாவு நல்லா பொங்கி புளிச்சிடும்” அவங்க கைபக்குவம் அப்படியே சரஸ்சம்மாவுக்கு இருக்கு” அதைச் சொல்லும் போதே அஞ்சலையின் கண் கலங்குவதைக் கண்டால் காவியா . அஞ்சலையின் அம்மா ராஜம் இறந்து 1 வருஷமாயிடுச்சி .அந்த மகராசி எல்லாரிடமும் அன்பா பழகுவாங்க. அந்த குடியிருப்புப் பகுதியில் இருக்கும் எல்லாருக்கும் அவங்கள பிடிக்கும். அவங்க வீட்டுத் தள்ளி கொஞ்சம் தூரத்தில இருக்கும் மலாய்கார மச்சி ரோசினா அவசரமா எங்காவது போனா அவங்க பிள்ளைகள ராஜம் வீட்டில தான் விட்டுப் போவாங்க. தம் பிள்ளையப் போலவே அந்த மாற்றான் இனப் பிள்ளையையும் பார்த்துக்கொள்ளுவார் ராஜம் அம்மா. “ ஹேய் ராஜம் அவாக் பாஞ்ஞாக் பகுஸ்லா , சுக்கா தோலோங் செமுவா ஓராங் ” என்று புகழ்ந்து சொல்லுவாங்க. அப்படிப்பட்ட நல்ல மனிஷியத்தான் அந்த கடவுள் கொண்டுட்டுப் போயிட்டான். என்று அடிக்கடி மச்சி ரோசினா அஞ்சலையைப் பார்த்தா சொல்லி வருத்தப் படுவாங்க.